சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
இதுமட்டும் அல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.
இதுமட்டும் அல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.
சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
…
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
…
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்
இயற்க்கை மருத்துவம் :-
இயற்க்கை மருத்துவம் :-
அஜிரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
… வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளை க்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளை க்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடு த்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடு த்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.
நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வர வும்.
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வர வும்.
பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு.,
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காய வைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண் டும்.
உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காய வைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண் டும்.
உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண் ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணிமீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண் ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணிமீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
தலையில் முடிவளர,முடி உதிர்வதைத் தடுக்க, இளநரை மறைய .– இயற்கை வைத்தியம்:_
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
தலையில் முடிவளர,முடி உதிர்வதைத் தடுக்க, இளநரை மறைய .– இயற்கை வைத்தியம்:_
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
…
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
…
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் —
மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் —
இயற்கை வைத்தியம்:-
*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
…
*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
…
*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இயற்கை வைத்தியம்:-
1) செருப்புக்கடி புண்ணுக்கு
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.
…
2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக
…
2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்
1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.
2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்
கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்
1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.
2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.
6) உடன் தீப்பட்ட புண்ணுக்கு…
1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.
2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.
3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.
4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).
7) கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க
1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.
2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.
தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்
தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்
1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.
2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.
9) உள்நாக்கு வளர்ச்சிக்கு
வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.
10) உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர
1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.
11) கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக
1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
12) பேன், பொடுகு, தலை ஊரல் தீர
1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.
2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.
13 ) அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக
மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.
…………………………………………………………………………………………………………..
எளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-
…………………………………………………………………………………………………………..
எளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-
குப்பைமேனிஇலை:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து நன்கு அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர அவை குணமாகும்.
…
வயிற்றுவலி போக்கும் நறுவலிப்பட்டை:
…
வயிற்றுவலி போக்கும் நறுவலிப்பட்டை:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, அதை தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி படிபடியாக குறையும்.
கரிப்பான் இலை:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை பிரச்சனை நீங்கும்.
கடலை இலை:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் வலி முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குணமாகும்..
மலச்சிக்கல்:
பிஞ்சு கடுக்காய்,சுக்கு சம அளவு எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு நன்கு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். இவ்வாறு செய்தல் நன்றாக மலம் இளகும்.
மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் படிபடியாக மறைந்து விடும்.
எலும்பு தேய்மானத்தை தடுக்க– இயற்கை வைத்தியம்
எலும்பு தேய்மானத்தை தடுக்க– இயற்கை வைத்தியம்
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோ…தெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.
இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.
எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.
இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.
எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
ரெசிபி
பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.
ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
டயட்
பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.
அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.
அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.
மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.
ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.
உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்
கல்தாமரை கோடியின் மருத்துவ குணங்கள் :-
கல்தாமரை கோடியின் மருத்துவ குணங்கள் :-
கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும்.
இதன் இலை மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
…
உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.
…
உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.
உடல் வலுப்பெற
உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்
இடுப்பு வலி தோள்பட்டை வலி நீங்க
இன்றைய நவீன உணவு மாறபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும் சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்துவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம் மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து. கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.
நரம்புகள் வலுப்பெற
நரம்புகளில் நீர் கோர்த்துக்கொண்டு நரம்பு வறட்சி உண்டானால் அது நரம்புப் பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இத்தகைய குறையைப் போக்கி நரம்புகளை வலுவடையச் செய்ய கல்தாமரையிலை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. அல்லது கல்தாமரை இலை பொடியில் தேன் கலந்து அருந்தலாம்.
ஆண்மை பெருக
இன்றைய பொருளாதார சூழ்நிலையால் மன அழுத்தம் உண்டாகி பலருக்கு வீரியக்குறைவு உண்டாகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கின்றனர். சிலர் திருமணத்திற்குப் பின் வீரியக் குறைவால் அவதிப்படுகின்றனர். இக்குறையைப் போக்க பல விளம்பரங்களைத் தேடி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டும் பயனில்லாமல் வேதனையுறுகின்றனர். இவர்கள், கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் ஒரு மண்டலம் அருந்தி வந்தால் வீரியக் குறைவு நீங்கி ஆண்மை பெருகும்.
சருமத்தைப் பாதுகாக்க
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி நீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கும்.
………………………………………………………………………………………………………………..
வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை-நிலக்குமிழ் செடி
………………………………………………………………………………………………………………..
வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை-நிலக்குமிழ் செடி
முதலில் ஏப்பம், வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கும். இது நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் நாளுக்கு நாள் உணவின் மேல் வெறுப்பு உண்டாகி எதை சாப்பிட்டாலும் வயிறு பாதிக்குமோ என எண்ணத் தோன்றும். சுத்தமான உணவை உட்கொண்டு நுண்கிருமிகள் நீக்கப்பட்ட நீரை அருந்தி வருவதே வயிற்று தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழங்களையும், செரிமானப் பாதையை பலப்படுத்தும் நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகளையும் உட்கொள்வதே நல்லது. உணவுப்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளை நீக்கி, அதனால் தோன்றும் வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகைதான் நிலக்குமிழ் என்ற குமிழம்.
ஜெம்லினா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடி வகையான நிலக்குமிழஞ் செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளும், வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நிலக்…குமிழ் இலை மற்றும் வேர்களிலுள்ள பியுரோபியுரான் வகையைச் சார்ந்த லிக்னான்கள் ஈ-கோலி மற்றும் ஸ்டெபிலோகாக்கஸ் வகையைச் சார்ந்த நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவை என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, தேவதாரு, நிலவேம்பு, பப்படப்புல், கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு ஆகியவை சம பங்கு, பொரித்த பெருங்காயம் கால்பங்கு ஆகியவற்றை எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 35 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டுக் காய்ச்சி, 125 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி, தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர மேல் வயிற்றுவலி, நாட்பட்ட இருமலால் தோன்றிய வயிற்றுவலி மற்றும் கிருமியால் தோன்றிய குடற்புண்கள் ஆகியன நீங்கும். உடல் உஷ்ணத்தால் தோன்றும் வயிற்றுவலி நீங்க நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர உடல் உஷ்ணம் தணியும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டுவலி நீங்கும்
எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:-
எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:-
சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது.
மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது.
…
திப் பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.
…
திப் பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.
சோம்பு:சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
வெந்தையம்:வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.
கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.
துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.
நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும்.
கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.
இருமலை மட்டுபடுத்தும், அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரம் இருமுறை உண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும்.
இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்:-
இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்:-
இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள்ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்! அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட் டிப்படைக்கும் மோசமான நோயாக இதய நோய் இருக்கிறது.
உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் …இதய நோய் வரலாம் . ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இத் தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடிப்பது………
இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.
கொலஸ்ட்ரால்………..
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உடல் எடை……….
இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி………….
தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
நீரிழிவு………..
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம்.
உணவுகள்………
டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.
ஆல்கஹால்………
ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.
ட்ரான்ஸ் கொழுப்புகள்……
பேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் பேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.
வைட்டமின்களில் கவனம்……..
ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.
மனஅழுத்தம்………
அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.
மருத்துவ ஆலோசனை………
குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளவேண்டும். கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல் ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும். இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற் பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.
வாழைத்தண்டு மருத்துவ குணம்:
வாழைத்தண்டு மருத்துவ குணம்:
அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.
ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.
… பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.
வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.
குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு.
வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.
இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.
தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.
நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.
பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-
பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-
அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்
… இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.
வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.
வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.
வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்
அதிகரிக்கும்
வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.
புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.
நெல்லிக்காய் சாறு – அழகு தரும் மருந்து.
துளசி சாறு – சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.
அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.
கடுக்காய் சாறு – முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.
முடக்கத்தான் சாறு – மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது
நல்லது
கல்யாண முருங்கை சாறு – உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.
தூதுவளை சாறு – சளி தொல்லை நீங்கும்
ஆடாதோடா சாறு – ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது
கரிசலாங்கண்ணி சாறு – கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது
முடி வளர்ச்சிக்கு நல்லது